"என்னை ஒரு கேள்வி கூட கேக்கல, ஆனா ரச்சிதாவுக்கு மட்டும்"... விக்ரமனை ஜாலியாக கிண்டிய ADK!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

Also Read | "ஷர்ட்ட கழட்டணுமா?".. புதிய ரியாலிட்டி ஷோவில் ஜிபி முத்து.. வந்ததும் அட்ராசிட்டி தான் 😂

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் அவர்கள் ஆவலாக உள்ளனர்.

இதனிடையே, Ticket To Finale டாஸ்க்கில் மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் மாறி மாறி போட்டியாளர்கள் மூன்று சைக்கிள்களை இயக்க மற்ற போட்டியாளர்கள் முன்னாடியும் பின்னாடியும் மாறி மாறி ஏறிய படி இருக்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் மாறி அமர்வதற்கு 10 வினாடிகள் மேல் எடுத்து கொண்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

இதில், மாறி மாறி அமர்வதை போட்டியாளர்களே திட்டம் போட்டு மாறி கொள்ளலாம் என்றும் பிக் பாஸ் அறிவிக்கிறார். மிகவும் விறுவிறுப்பாகவும், அதே வேளையில் சிறப்பான டாஸ்க்காகவும் இது அமைந்திருந்தது. இந்த நிலையில், விக்ரமனை பார்த்து ADK கேட்ட விஷயம், பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

மிதிவண்டி டாஸ்க்கில் இருக்கையில் இல்லாமல் முன் பக்க கம்பியில் இருக்கும் போது அது ஹவுஸ் மேட்ஸை பெரிய அளவில் சிரமத்தை உண்டாகி இருந்தது. அப்படி உட்கார்ந்ததால் ரச்சிதா சற்று அவதிக்கு உள்ளாக, இன்னொரு சைக்கிளில் முன்பக்க கம்பியில் இருக்கும் விக்ரமன் எப்படி உட்கார வேண்டும் என்றும் ரச்சிதாவுக்கு அறிவுறுத்துகிறார்.

இதனை மற்றொரு சைக்கிளில் முன் பக்கம் இருக்கும் ADK கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் விக்ரமனிடம், "ஏன் விக்ரமன் நானும் ரொம்ப நேரமா முன்பக்க கம்பியில் இருக்கிறேன். ஒரு கேள்வி கூட கேட்கல, ரச்சிதாவை பார்த்து அவ்வளவு கேட்கிறீங்க, அதான் யோசிக்கிறேன் என்ன நடக்குது இங்க" என ஜாலியாக குறிப்பிடுகிறார்.

இதற்கு பதில் சொல்லும் விக்ரமன், "அவங்க கால்ல அடிபட்டு இருக்குல்ல. அதனால தான்" எனக் கூறியதும், மறுகணமே எனக்கு உடம்பே அப்படித் தான் இருக்கு என்பது போல ADK சொன்னதும் அங்கிருந்த போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்க தொடங்குகின்றனர்.

Also Read | "கொஞ்ச நேரத்துல அடிச்சுப்பாங்களோ?".. ஒண்ணா இருந்த அசிம், விக்ரமன்.. அமுதுவின் தெறி கமெண்ட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman advice rachitha in cycle task adk fun question

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Rachitha, Vikraman will find this news story useful.