தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Also Read | வெளியேறிய போட்டியாளர் பற்றி உருக்கமாக பேசிய ஷிவின்.. நெகிழ்ந்த மைனா..!
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் Guest வருகிறார்கள் என போட்டியாளர்கள் குதூகலாமாகி இருந்த நிலையில், அவர்கள் வந்து பலரின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என அனைத்து விஷயங்களையும் கூறியதால், போட்டியாளர்கள் கதி கலங்கியும் போயிருந்தனர்.
இதற்கு அடுத்தபடியாக, இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கி வெளியேறி இருந்த ராபர்ட் மற்றும் அசல் கோலார் ஆகியோரும் தற்போது Guest ஆக பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.
இதனிடையே, வனிதா வீட்டிற்கு வருவார் என்பது பற்றி போட்டியாளர்கள் பேசிய வண்ணம் இருந்தனர். அப்போது பேசும் அசிம், "வனிதா அக்காவுக்காக தான் வெயிட்டிங். அவங்க பேசட்டும். நம்ம சூப்பரா கவுண்டர் குடுக்கலாம் அவங்களுக்கு" என சிரித்துக் கொண்டே தெரிவிக்கிறார். இதனைக் கேட்டதும் ஒரு நிமிடம் ஷாக்காகும் அமுதவாணன், "நம்மளா?. ஏன் நம்மன்னு எங்கள சேர்க்குறே. Open-ஆ சொல்றேன்யா. அந்த அளவுக்கு எங்க நெஞ்சுல தைரியம் இல்லைய்யா. இன்னும் ரெண்டு வாரத்துக்கு அப்புறம் நாங்களே போய்டுவோம்யா" என ஜாலியாக தெரிவிக்க, "இவங்க வனிதா வனிதான்னு சொல்லி அந்தம்மாவ கடைசில இங்க எறக்க போறாங்க" என விக்ரமன் கூறுகிறார்.
இதே போல பேசும் மைனா நந்தினி, வனிதா வந்தால் நேராக அசிமிடம் சென்று நான் உங்க ஃபேன் என்றும் தெரிவிப்பார் என ஜாலியாக குறிப்பிடுகிறார். இப்படியாக வீட்டில் வரும் நபர்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களும் ஜாலியாக பேசி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், வனிதா குறித்து விக்ரமன் பேசி உள்ள விஷயம், தற்போது பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
அனைவரும் வனிதா உள்ளே வந்தால் என்ன விஷயங்கள் நடைபெறும் என பேசிக் கொண்டிருக்கும் நிலையில், கடைசியில் பேசும் விக்ரமன், "அன்பால அவங்க (வனிதா) வாயை நம்ம கட்டிப் போட்டுடலாம்" என தெரிவிக்கிறார். இதனைக் கேட்டதும் மற்ற போட்டியாளர்கள் அப்படி நடக்குமா என்பது போன்றும் ரியாக்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "கையிலே ஆகாசம்".. கண்ணீர் விட்டு கலங்கிய தமன்.. எமோஷனல் ஆன வாரிசு படக்குழு!!