தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
![Vikraman about kathir decision of leaving bigg boss house Vikraman about kathir decision of leaving bigg boss house](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vikraman-about-kathir-decision-of-leaving-bigg-boss-house-new-home-mob-index.jpg)
Also Read | "அதை கவனிக்க தவறிட்டோமா?".. அசீம் பத்தி விக்ரமனுக்கு வந்த சந்தேகம்.. மகேஷ்வரி சொன்ன விஷயம்..!
இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.
இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.
இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றியும் வருகின்றனர். அவர்கள் பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது. இதனிடையே, சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி இருந்தது.
இதற்கு மத்தியில், சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து தற்போது வெளியேறி உள்ளார். முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சிக்க, போட்டியாளர்கள் அனைவரும் வேண்டாம் என பதறியபடி அருகில் சென்றனர்.
இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருந்தால் அதிக பணம் வந்திருக்கும் என கதிரை குறிப்பிட்டு ஹவுஸ்மேட்ஸ் கருத்து தெரிவிக்கவும் செய்திருந்தனர்.
இந்த நிலையில் கதிரவன் முடிவு குறித்து விக்ரமன், சாந்தி மற்றும் அமுதவாணன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் விக்ரமன், "அவர் ஏற்கனவே பிளான்ல இருந்திருக்காரு போல. என்ன இருந்தாலும் வந்த உடனே எடுத்துடணும் அப்படின்னு" என கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசும் அமுதவாணன், "கதிர் வந்து எடுத்தது மேட்டர் கிடையாது. ஆனால் ஒரு மணி நேரமாச்சு விட்டு எடுத்துக்கலாம்ன்னு தெரியுமே கதிருக்கு" என்ற கேள்வியை முன் வைத்து நிறைய பணம் அவர் எடுத்திருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
இதற்கடுத்து பேசும் விக்ரமன், "எடுத்துட்டு போனும்ண்ணு முடிவு பண்ணதுக்கு அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சா என்ன. அவருக்கு பணம் மேட்டர் இல்ல. அவருக்கு எடுக்கணும், எடுத்துட்டு வெளியே போணும்ங்குறது தான் மேட்டரு. அப்போ முதல்லயே எடுத்தா என்ன, ஒரு மணி நேரம் கழிச்சு எடுத்தா என்ன புரியுதா உங்களுக்கு?" என்ற விளக்கத்தையும் கூறுகிறார்.
விக்ரமன் கருத்தை ஆதரித்து பேசும் சாந்தி, "இந்த சீசனில் பெட்டி எடுத்தது கதிர் தான் என்ற பெயர் இருக்கும். நேரமாகி இருந்தால் வேறு யாராவது கூட எடுத்திருக்கலாம் என கதிர் நினைத்திருக்கலாம்" என்றார். சாந்தி மற்றும் விக்ரமன் ஆகிய இருவருமே கதிர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "சண்டை போட்டவங்க ஒண்ணு சேருற நாளு போல".. அசிம் - மகேஸ்வரி, ஜிபி முத்து - விக்ரமன்.. நெகிழ்ச்சி Moments!!