"14 வாரமும் விமர்சனம், அதுக்கு எல்லாம் ஒரு துணிச்சல் வேணும்".. அசிம் பற்றி விக்ரமன்.. FIRE'UU 🔥!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | சமையல் விஷயத்துல விக்ரமன வெச்சு Fun பண்ணிய சாந்தி!!.. இப்டி எல்லாம் மனுஷன் இருந்துருக்காரா? 😅

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனலட்சுமியும், மணிகண்டாவும் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த தனலட்சுமி மற்றும் மணிகண்டா ஆகியோர், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளது பல போட்டியாளர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது.

இதனிடையே, தற்போது போட்டியாளர்கள் பிக் பாஸாக மாறலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, ADK, ஷிவின், கதிரவன் உள்ளிட்டோர் பிக் பாஸாக மாறி சில டாஸ்குகள் மற்றும் அசத்தலான அறிவிப்புகளையும் போட்டியாளர்களுக்கு கொடுக்கின்றனர்.

அப்போது பிக் பாஸாக மாறும் கதிரவன், அனைத்து போட்டியாளர்களின் பெஸ்ட் பற்றி மட்டுமே பேசும் படி அறிவுறுத்துகிறார். அதன் படி, அசிமை குறித்து பாசிட்டிவான விஷயங்களை விக்ரமன் பேசுகிறார். "நான் அறிஞ்ச வரைக்கும் முகத்துக்கு நேரா எல்லா விஷயத்தையும் பேசக்கூடிய நபர் அசிம். நான் அவரை நேசிக்க ஆரம்பிச்ச தருணங்களும் இருக்கு. அதை நான் நிறையவாட்டி அவருகிட்ட சொல்லி இருக்கேன்.

14 வாரமும் கடுமையான விமர்சனங்களை அவர் சுமந்து தான் வந்திருக்கிறார். அத்தனை விமர்சனங்களையும் வைத்து எந்த இடத்திலும் சோர்ந்து விடாமல், இத்தனை வாரங்கள் கடந்து வந்துருக்காரு. அதுக்கு ஒரு பெரிய துணிச்சல் வேணும். அந்த துணிச்சல் அவர்கிட்ட இருக்கு. அது கத்துக்க வேண்டிய ஒண்ணு" என தெரிவித்தார். இதே போல, அசிமும் விக்ரமன் குறித்து பெஸ்ட்டான விஷயங்களை பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | கதிரவன் செஞ்சதுலயே தரமான சம்பவம் 🔥👏🏻.. விக்ரமன் & அசிம்.. Applause அள்ளிய டாஸ்க்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman about azeem in new task by kathirravan bigg boss

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kathiravan, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.