தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
Also Read | "வாரிசு படத்தின் ரன்னிங் டைம் இது தானா?".. வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். அவர் வெளியேறியதும் பிக் பாஸ் வீட்டில் அவருக்கு மிகவும் நெருங்கிய போட்டியாளரான ஷிவின் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருந்த விஷயம், பலரையும் மனம் உருக வைத்திருந்தது.
இந்த நிலையில், வார இறுதியில் தோன்றி இருந்த கமல் ஹாசன், Finaleவில் வெற்றி பெற தகுதி இல்லாத ஒருவரின் பெயரை குறிப்பிடும் படி அனைத்து போட்டியாளர்களிடமும் கேட்டுக் கொண்டார்.
அப்போது ஷிவின், ரச்சிதா, விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் அசிம் பெயரை தெரிவித்திருந்தனர். இதில், அசிம் வெற்றி பெற தகுதி இல்லாத ஆள் என குறிப்பிட்டு அதற்கு விளக்கம் கொடுத்த விக்ரமன், "நம்ம முன்னாடி விவாதிக்கிறது எதிரியா இருந்தாலும் அவங்களுக்கு ஒரு கண்ணியம் இருக்குது. அது அவங்களுக்கு கொடுத்து தான் பேசணும்ன்னு உறுதியா நம்புறேன். அத அசிம் தவறிட்டாரு. அது ஒரு Strategy ஆவே தான் வச்சிட்டு இருக்காருன்றது இப்பவும் நான் உறுதியா இருக்கேன். அதனால அப்படிப்பட்டவர் பிக் பாஸ் போன்ற தமிழ் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய நிகழ்ச்சியில டைட்டில் வாங்கினார் அப்படினா, அது ஒரு உதாரணமாக ஆயிடக்கூடாது.
இன்னொன்னு அசிம் கொஞ்சம் முன்னாடி பேசும்போது கூட ஒன்னு சொன்னாரு, இதுக்கப்புறம் யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க போவதில்லை, டபுள் மடங்கா வச்சு செய்யப் போறேன்னு சொன்னாரு. ஸாரி கேட்டா திரும்ப அத செய்யக்கூடாதுன்னு தான் அத கேக்கணும். இல்லன்னா அதுக்கு பலம் இல்லைன்னு தான் சொல்லிட்டு இருந்தோமே ஒழிய, ஒருத்தன் தவறே உணரக்கூடாது என்பதற்காக இல்லை. அந்த அடிப்படையில் இவர் தன்னை இன்னும் உணராமல் திரும்பவும் டபுள் மடங்கா வச்சு செய்வேன்னு சொல்றதும், 14 வாரம் இந்த வீட்டில் மக்களோடு ஆதரவு பெற்று, நாமினேட் ஆகி உள்ள வருவேன் வந்து வச்சு செய்வேன்னு சொல்றதும், மக்களை அவர் Underestimate பண்றாரோ அப்படின்னு தோணுது.
அப்படிப்பட்ட ஒரு நபர் டைட்டில் வாங்குறதுக்கு தகுதி இல்ல. அதுவும் பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியில் டைட்டில் வாங்க தகுதி இல்லை என்று நான் நினைக்கிறேன் " என விக்ரமன் குறிப்பிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசி இருந்த அசிம், தான் மன்னிப்பு கேட்பது குறித்தும், தனது கோபம் என்ற குணத்தை குறித்தும் மட்டுமே அனைத்து போட்டியாளர்களும் பேசுகிறார்கள் என்றும் நான் செய்யும் நல்ல விஷயங்களை இந்த வீட்டில் யாரும் பேசுவதில்லை என்று கூட இறுதியில் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "விக்ரமன நாமினேட் பண்ணல, ஏன்னா".. பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷன்.. பரபர சம்பவம்!!