விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் விக்ரமின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியாகி உள்ளன.
Also Read | "சட்ட ரீதியாக சந்திப்போம்" - இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட விளக்க அறிக்கை.!
விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளுக்காக நடிகர் விக்ரம் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முதல்கட்டமாக இன்று காலை திருச்சி தெப்பக்குளம் புனித ஜோசப் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். நாளை கோயம்புத்தூரில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். பின்னர் 25 ஆம் தேதி சென்னையில் நடக்கும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் கொச்சி, பெங்களூர், ஐத்ராபாத் நகரங்களுக்கு முறையே அடுத்தடுத்த நாட்களில் செல்கிறார்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் 2 பாடல்களில் தராங்கினி எனும் ஒரு பாடலும் "ஏலே இளஞ்சிங்கமே" எனும் மற்றொரு பாடலும் சில நாட்களுக்கு முன் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.
கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | அஜித் நடிக்கும் AK61.. படப்பிடிப்பு இந்த ஊர்லயா? வெளிவந்த வைரல் BTS போட்டோ!