இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Also Read | "ஆசான் அஜித்குமார்".. AK-க்கு ஆசிரியர் தின வாழ்த்து சொன்ன பிரபல AK61 பட நடிகர்! வைரல் ட்வீட்
விக்ரம் வேதா படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ர அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர்.
தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது என தற்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் OTT டிஜிட்டல் உரிமத்தை Voot Select நிறுவனம் கைப்பற்றியுள்ளது. Voot, ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.
Also Read | பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராம் கதாபாத்திரம் இதுவா? செம்ம கேரக்டர் லுக் போஸ்டர்!