இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் புதிய மேக்கிங் BTS வீடியோ வெளியாகி உள்ளது.
Also Read | நடிகர்கள் அஜித் - விஜய் பற்றி ட்வீட் செய்த கீர்த்தி ஷெட்டி.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.
இந்த படத்தை இந்தியில் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கி உள்ளனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர்.
தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. பின்னர் லக்னோவில் நடைபெற்றது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
ஏற்கனவே இந்த படத்தின் டீஸர், டிரெய்லர் & போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு "வேதா" கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் கதாபாத்திரத்தின் மேக்கிங் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சாம் CS இசையில் "தனனன தனனா" பின்னணி இசையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. ஹிருத்திக் ரோஷனின் வேதா லுக் எப்படி உருவானது என்பதை வீடியோவில் படக்குழுவினர் விவரிப்பது போலவும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலர்ஸ் சினிப்ளக்ஸ் சேனல் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை டி- சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | மனைவியோடு KGF ஹீரோ யஷ் சூப்பர் ஃபோட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!