'விக்ரம் வேதா', 'ஜெய்பீம்' புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய படம்.. செம்ம ஜானரா இருக்கே.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் மணிகண்டன்.

vikram vedha jaibhim manikandan starring new film update
Advertising
>
Advertising

Also Read | ‘அவருனு நெனைச்சுட்டேன்.. ’.. பிரபல நடிகரின் பெயர் கொண்ட ரசிகரிடம் ட்விட்டரில் பேசிய கமல்.!

முன்னதாக சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த ஏலே திரைப்படத்தில் மணிகண்டன் நடித்திருந்தார். இந்நிலையில் இன்னும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ள BTS புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

vikram vedha jaibhim manikandan starring new film update

இப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர்.

இப்படத்தில் மணிகண்டனுடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் 'குறட்டை' பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றனர். சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Also Read | Sardar : கார்த்தியின் ‘சர்தார்’ வெற்றி.. இயக்குநர் PS மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு ..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram vedha jaibhim manikandan starring new film update

People looking for online information on Jaibhim manikandan, Manikandan will find this news story useful.