விக்ரம் வேதா இந்தி ரீமேக்.. ஹிர்த்திக் ரோஷன் பகிர்ந்த கொல மாஸ் லுக்! தீயாய் பரவும் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

Vikram Vedha Hindi Remake Hrithik Roshan New Look Still Released
Advertising
>
Advertising

Also Read | நயன்தாரா - பிரித்வி ராஜ் இணையும் புதிய படம்.. அல்போன்ஸ் புத்ரன் போட்ட வைரல் ட்வீட்!

இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

Vikram Vedha Hindi Remake Hrithik Roshan New Look Stills Released

இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் வெளியாகி உள்ளது. நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு "வேதா" கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியாகி இருந்தது. பின் பிப்ரவரி 24-ல் விக்ரம் கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியானது.  இந்நிலையில் வேதா கதாபத்திரத்தின் புதிய லுக் ஸ்டில்லை ஹிர்த்திக் ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

"இது தான் தாடியுடன் இருக்கும் கடைசி பதிவு" என தலைப்பிட்டுள்ளார். மேலும் ஹிர்த்திக் ரோஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது என தற்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "மாஸ்டர் விஜய் JD Vibes".. 'விக்ரம்' படத்தின் புது போஸ்டர் பற்றி சொன்ன பிரபல இயக்குனர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Vedha Hindi Remake Hrithik Roshan New Look Still Released

People looking for online information on Hrithik Roshan, Hrithik Roshan New Look, Vikram Vedha, Vikram Vedha Hindi Remake will find this news story useful.