OFFICIAL: ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா'.. 10 நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் ரிலீசான விக்ரம் வேதா படத்தின் உலகளவிலான வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்த படத்தை இந்தியில்  இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கி உள்ளனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடித்துள்ளனர்.

தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தனர். இந்தியிலும் இசையமைப்பாளர் சாம் CS இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. இந்திய அளவில் இந்த திரைப்படம் 65.04 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படம் உலகளவில் 104 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலர்ஸ் சினிப்ளக்ஸ் சேனல் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை டி- சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Vedha Hindi Box Office Collection Report official

People looking for online information on Vikram Vedha, Vikram Vedha Box Office will find this news story useful.