உலகின் மிக பெரிய திரையில் விக்ரம் படத்தின் டிரெய்லர் திரையிடப்படுகிறது.
Also Read | தருமபுர ஆதினத்தின் திருக்கடையூர் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்.. முழு தகவல்
கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக வரும் ஜூன்-3 அன்று வெளியாகிறது.
இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தின் வெளியீட்டை ஒட்டி கமல்ஹாசன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி, ஐதராபாத் முன் வெளியீட்டு விழா, கோலாலம்பூர் நிகழ்ச்சி, மும்பை முன் வெளியீட்டு விழா என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் நாளை ஜூன் 1 ஆம் தேதி துபாயில் உள்ள உலகின் மிக பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தின் டிரெய்லர் இரவு 8:10 மணிக்கு திரையிடப்படுகிறது.
163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் நீளம் கொண்டது. மிகப்பெரிய திரையில் விக்ரம் படத்தின் டிரெய்லர் என ராஜ்கமல் நிறுவனம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஏற்கனவே புர்ஜ் கலிஃபாவில் குரூப், 83 படங்களின் முன்னோட்ட விளம்பரங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read | தளபதி விஜய் கூட எப்போ நடிக்க போறிங்க? பிரபல பாலிவுட் நடிகை சொன்ன செம்ம பதில்!