அப்படி போடு..விக்ரம் நடிக்கும் "கோப்ரா" பட ரிலீஸ்.. தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ஆஹா..ஆதி - நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு.. யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க!

இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள்,  சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஏப்ரல் 22 அன்று ஆதீரா எனும் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. A. R ரஹ்மான் இசையில், பா.விஜய் வரிகளில் இந்த பாடல் உருவாகி உள்ளது.

இந்நிலையில் கோப்ரா படம் ரிலீஸ் ஆகும் தேதி நாளை (20.05.2022) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் வரை தொடர் விடுமுறை தினங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Vikram starring Cobra movie release update from producer

People looking for online information on Cobra movie, Cobra movie release update, Vikram will find this news story useful.