பாராட்டைப் பெற்ற கோப்ரா படத்தின் INTERROGATION SCENE BTS.. ரசிகருக்காக வெளியிட்ட அஜய் ஞானமுத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில்   ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விக்ரம் நடிப்பில் 'கோப்ரா-2' வருமா? பதில் அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து!

”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும்,  செங்கல்பட்டு ஏரியாவில் 87 திரையரங்குகளிலும், கோப்ரா படம் வெளியாகி உள்ளது. திருச்சி தஞ்சாவூர் ஏரியாவில் 42 திரையரங்குகளிலும், மதுரை ஏரியாவில் 69 திரையரங்குகளிலும், திருநெல்வேலி ஏரியாவில் 31 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 89 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியா & வட ஆற்காடு ஏரியா முறையே 52 & 46 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 488 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் குறித்து ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த நிகழ்வில் கோப்ரா படத்தில் பாராட்டைப் பெற்ற விசாரணை காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட ஒரு ரசிகர் கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து "வீடியோ எதுவும் இல்லை, போட்டோ மட்டும் உள்ளது" என கூறி அந்த காட்சியின் மேக்கிங் BTS போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அடடே.. 'கோப்ரா' படத்தின் ஒரு வார வசூல் இம்புட்டா? ஐரோப்பிய வினியோகஸ்தர் சொன்ன சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Starring Cobra Movie Interrogation Scene BTS Image

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Cobra Movie Interrogation Scene, Vikram will find this news story useful.