ஒரு வழியாக வெளியான விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் அப்டேட்! வைரலாகும் BTS IMAGE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.

Advertising
>
Advertising

கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.  இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். மேலும் படத்தின் BTS புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் கிரீன் மேட் தொழில் நுட்பத்தில் படப்பிடிப்பு நடந்து வருவது தெரிகிறது. மேலும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளதாக அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார்.

 

Tags : Vikram, Cobra

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Starring Cobra Movie Final Schedule Shooting Update

People looking for online information on Cobra, Vikram will find this news story useful.