முக்கிய அறிவிப்பை வெளியிட்டு 'கோப்ரா' படத்தின் ரிலீசை உறுதி செய்த தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவலை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் 2 பாடல்களில் தராங்கினி எனும் ஒரு பாடலும்  "ஏலே இளஞ்சிங்கமே" எனும் மற்றொரு பாடலும் சில நாட்களுக்கு முன் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

கோப்ரா படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு படத்திற்கு சென்சார் போர்டு மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வீடியோ மூலம் அறிவித்துள்ளது.‌ இதன் மூலம் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகி உள்ளது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Cobra, Vikram, CBFC

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Starring Cobra Movie Censored and Certified

People looking for online information on CBFC, Cobra, Vikram will find this news story useful.