7 வித்தியாசமான கெட் அப்-களில் விக்ரம்.. வெளிவந்த 'கோப்ரா' படத்தின் மிரட்டலான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தமிழ் திரைப்பட இயக்குனர் மணி நாகராஜ் மரணம்.. பிரபல எடிட்டரின் நெகிழ்ச்சியான பதிவு

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் டிரெய்லர் இன்று ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகி உள்ளது.

சென்னையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஏழு வித்தியாசமான கெட் அப்-களில் சியான் விக்ரம் இந்த டிரெய்லரில் தோன்றியுள்ளார். கணித ஆசிரியராக விக்ரம் கதாபாத்திரம் டிரெய்லரில்  காண்பிக்கப்பட்டுள்ளது. ஆக்சன் காட்சிகளுடன் அதிரடி சேஸிங் காட்சிகளும் டிரெய்லரில் முக்கிய அம்சமாக உள்ளன. டிரெய்லரில் இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, ஶ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் தோன்றியுள்ளனர்‌.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் 2 பாடல்களில் தராங்கினி எனும் ஒரு பாடலும்  "ஏலே இளஞ்சிங்கமே" எனும் மற்றொரு பாடலும் சில நாட்களுக்கு முன் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஆஹா..பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் "கண்மணி ராம்போ கதீஜா".. எப்போ? எதுல?

7 வித்தியாசமான கெட் அப்-களில் விக்ரம்.. வெளிவந்த 'கோப்ரா' படத்தின் மிரட்டலான டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Srinidhi Shetty Cobra Movie Trailer Released

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Cobra Movie Trailer Release, Srinidhi Shetty, Vikram will find this news story useful.