அடடே..விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. மலேசியா உரிமத்தை கைப்பற்றிய பிரபல 'வலிமை' வினியோகஸ்தர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோப்ரா படத்தின் மலேசியா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் கைப்பற்றி உள்ளார்.

Vikram Srinidhi Shetty Cobra Malaysia Rights Lotus Five Star AV
Advertising
>
Advertising

Also Read | அருண் விஜய் & ரெஜினா கசன்ட்ரா நடிக்கும் 'பார்டர்'.. பட ரிலீஸ் எப்போ? செம தேதி!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சியான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில்  விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள்.

Vikram Srinidhi Shetty Cobra Malaysia Rights Lotus Five Star AV

‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார்.  இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மலேசியா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் ஏவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் வலிமை படத்தை வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் நேற்று முன்தினம் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Also Read | ஆதி - நிக்கி கல்ராணி திருமணத்தின் 100வது நாள்.. உலகப்புகழ் பெற்ற இடத்தில் கொண்டாடிய ஜோடி!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Srinidhi Shetty Cobra Malaysia Rights Lotus Five Star AV

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Lotus Five Star AV, Srinidhi Shetty, Vikram will find this news story useful.