விக்ரம் திரைப்படம் கேரளாவில் நான்காவது வாரத்துக்குப் பிறகும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக விநியோகஸ்தர் அறிவித்துள்ளார்.
Also Read | இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு திருமண நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துகள்… Viral pic
விக்ரம் ரிலீஸ்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
வசூல்வேட்டை
உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விக்ரம் இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறத். கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல் விக்ரம் படத்தின் வசூல் பற்றி பேசும் போது சூசகமாக 300 கோடி ரூபாய் என பேசியது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் தொடரும் வெற்றி
படம் ரிலீஸாகி வெற்றிகரமாக 25 நாட்களைக் கடந்துள்ளது. விக்ரம் திரைப்படம் தமிழ் மொழியைப் போலவே மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் டப்பிங் வெர்ஷனிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை கேரளாவில் பிரபல விநியோகஸ்தரான ஷிபுதமீன்ஸ் வெளியிட்டார். இந்நிலையில் இப்போது 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இன்னமும் வெற்றிகரமாக 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவரது டிவீட்டில் பல சாதனைகளை விக்ரம் திரைப்படம் தகர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Also Read | வைரலான ‘வாரிசு’ போஸ்டர்கள்… விஜய்யை ஸ்டைலாக ’click’ செய்தது இந்த பிரபலம்தான்