ஆஹா..விக்ரம் பிரபுக்கு ஜோடியான பிரபல வெற்றிப்பட நடிகை.. வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பிரபல கதாநாயகி நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | பா.ரஞசித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் புதிய படம்.. லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட்!

இயக்குனர்  முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில்  கிராமத்து பாத்திரத்தில் நடித்தவர் விக்ரம் பிரபு. இயக்குனர் முத்தையா கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு “டைகர்” படத்தில் தற்போது நடிக்கிறார். இப்படத்தினை M Studios நிறுவனம் Open Screen Pictures  உடன் இணைந்து தயாரிக்கின்றது.

இப்படத்திற்கு சாம் CS இசையமைக்க, கதிரவன் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்குனராகவும், மணிமாறன் (எடிட்டிங்), முருகன் (ஸ்டில்ஸ்), பாபா பாஸ்கர் (நடன அமைப்பு), கணேஷ் மாஸ்டர் (ஸ்டண்ட்) பணிகளை கவனிக்கின்றனர்.

நடிகர் சக்தி வாசு வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை அனந்திகா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

'வெள்ளக்கார துரை' படத்தில்  விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா ஜோடி ஏற்கனவே இணைந்து நடித்துள்ளது. ‘டைகர்’ படத்தில்  இந்த ஜோடி மீண்டும்  இணைந்து திரையில் தோன்றவுள்ளார்கள்.

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக டாணாக்காரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இறுகப்பற்று, பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். படம் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இறுகப்பற்று படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார்

Also Read | விக்ரம் நடிக்கும் கோப்ரா.. வெளியான EXCLUSIVE ரிலீஸ் போஸ்டர்! எப்படி இருக்கு?

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Prabhu Sridivya joining once again for the movie

People looking for online information on Sridivya, Vikram Prabhu, Vikram prabhu next movie will find this news story useful.