வெளியான 'விக்ரம்' படத்தின் முதல் VIDEO SONG.. அனிருத் மியூசிக்கும் கமல் ஆக்சனும் பட்டைய கிளப்புது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தில் இருந்து முதல் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. 

Advertising
>
Advertising

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தின் தமிழக வசூலினை அதிகாரபூர்வமாக கூறியுள்ளார். அதன் படி விக்ரம் படம்  தமிழகத்தில் 75 கோடி ரூபாயை ஷேராக வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது. 25வது நாளைக் கடந்தும்  படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது. 

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், விக்ரம் படத்தின் "போர் கண்ட சிங்கம்" பாடலின் EDM வெர்சன் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் ஆல்பத்தில் இந்த பாடல் இல்லை. படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது. கமல்ஹாசனின் ஆக்சன் காட்சிகளுக்கு பின்னணியில் இந்த பாடல் திரையரங்கில் ஒலித்தது. தற்போது ஆடியோ & வீடியோ வடிவில் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

வெளியான 'விக்ரம்' படத்தின் முதல் VIDEO SONG.. அனிருத் மியூசிக்கும் கமல் ஆக்சனும் பட்டைய கிளப்புது! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Porkanda Singam EDM version Video Song out now

People looking for online information on Kamal Haasan, Porkanda Singam, Vikram, Vikram Songs will find this news story useful.