தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.
விக்ரம் நடிப்பில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படம் திரையரங்கில் ரிலீசானது. தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 11 அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
அதே போல் நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது.
இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித், நடிகர் விக்ரம் நடிப்பில் சியான்61 என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது.
இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு ஆகும்.
இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரத்யேகமாக பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவாக உள்ளதாகவும், 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். பான் இந்திய படமாக பெரும் பொருட் செலவில் உருவாக உள்ளது என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.