நாயகன் மீண்டும் வரார் ‘ஓடிடி’யில் … “ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்ட ‘தெறி’ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீம் தேதி தற்போது அறிவிக்கப்படுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் சூர்யாவுக்கு கிடைத்த கௌரவம்… ஆஸ்கர் கமிட்டியில் இணைய அழைப்பு

விக்ரம் ரிலீஸ்

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

வசூல்வேட்டை

உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விக்ரம் இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறத். கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல் விக்ரம் படத்தின் வசூல் பற்றி பேசும் போது சூசகமாக 300 கோடி ரூபாய் என பேசியது குறிப்பிடத்தக்கது.  மேலும் 25 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதால் வசூல் 400 கோடி ரூபாயை நெருங்கும் என சொல்லப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ்

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாக தற்போது பிரபல நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள வீடியோ அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. கமல் தோன்றும் அந்த வீடியோவில் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | சிம்பு மற்றும் மனைவியோடு T ராஜேந்தர்… இலண்டனில் இருந்து வெளியான சமீபத்தைய புகைப்படம்

 

தொடர்புடைய இணைப்புகள்

Vikram ott streaming date announced

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram Movie, Vikram Movie OTT Rlease Updates will find this news story useful.