"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
Also Read | கேன்ஸ் படவிழாவில் கமல்ஹாசனை சந்தித்த A.R. ரஹ்மான்.. ஆண்டவர் கெட்டப் வேறலெவல்! வைரல் PHOTOS
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.
இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் மே 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் Vistaverse மற்றும் Lotus Meta Entertainment உடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தின் டிரெய்லர் & NFT இன்று மே 18-ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என்று ராஜ்கமல் நிறுவனம் & கமல்ஹாசன் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://vikram.vistaverse.io/ என்ற இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கமல்ஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார்.
ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8