BREAKING: "விக்ரம்" படத்தில் விஜய் சேதுபதிக்கு ஹீரோயின் இவரா? WOW செம அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. பின்னர் நடிகர் பஹத் பாசிலும் விக்ரம் பட படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். இந்த படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிகர் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கிறார். 

படத்தில் பங்கு பெறும் CAST & CREWவை இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற இருக்கிறது என நம்பந்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை ஷிவானி ஆகஸ்ட் -24 முதல் காரைக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என நம்பந்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Vikram movie vijay sethupathi heroine update

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Shivaani, Vijay Sethupathi will find this news story useful.