இந்த வருசம் 'விக்ரம்' தான் நம்பர் ஒன்.. வெளிவந்த USA ஃபாக்ஸ் ஆபிஸ் வசூல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "அப்பவே கமல் படத்துல கிராஸ் ஓவரா.?".. இது பாரதிராஜாவின் மல்டிவெர்ஸ்.. இதான் இப்போ செம Trending

‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார்.

உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் ‌வாட்சை பரிசளித்தார். இந்த வாரம் விக்ரம் படம் இரண்டாவது வாரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் அமெரிக்க வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த விக்ரம் படம், அமெரிக்காவில் மட்டும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்த வருடம் வெளியான படங்களில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் அமைந்துள்ளது.

 

Also Read | ‘விக்ரம்’ பார்த்த ‘அவ்வை சண்முகி’ மேக்கப் மேன் மகள்.. இவங்க ஹாலிவுட் நடிகையா.?

 

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie USA Box Office Collection 2.5 Million USD

People looking for online information on Vikram Movie, Vikram Movie USA Box Office will find this news story useful.