விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
Also Read | கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஆஸ்திரேலியா வசூல்.. வெளிவந்த RECORD BREAKING கலெக்ஷன் REPORT!
கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர். விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.
விக்ரம் படம், அமெரிக்காவில் மூன்று நாட்களில் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் அமெரிக்காவில் 12 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது. மேலும் தெலுங்கானா, ஆந்திராவில் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை கிண்டியில் நடைபெறுகிறது. இதில் அனிருத், கமல், லோகேஷ், உதயநிதி ஸ்டாலின், மதுரை அன்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு நாட்டுக்கோழி சூப், முருங்கை கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சுப்போட்ட வறுவல், வஞ்சரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, பன்னீர் டிக்கா, மெக்சிகன் டாகோஸ், ஜலபேனோ சீஸ் சமோசா, கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, ரைதா, விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவைக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா என விருந்தினர்களுக்கு உணவு பதார்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.
Also Read | ரஜினிகாந்தை சந்தித்த தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பாளர்.. இதான் காரணமா?