விக்ரம் படத்துக்காக மீண்டும் ஒண்ணு சேர்ந்த பஞ்சதந்திரம் நண்பர்கள்.. வைரலாகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக, விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருந்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பாஹத் பாசில் ஆகியோரை வைத்து விக்ரம் என்னும் படத்தை இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

ஜூன் மாதம், 3 ஆம் தேதியன்று இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதன் காரணமாக, படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், படத்தின் ரிலீஸையும் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

விக்ரம் படத்தின் செம 'Promo'

அது மட்டுமில்லாமல், விக்ரம் படத்தின் புரொமோஷன் வேலைகளும் படு ஜோராக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. பேன் இந்தியா திரைப்படம் என்பதால், பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை, பல நிகழ்ச்சிகளில் படத்தின் புரொமோஷன் வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்ரம் படத்தின் புரொமோஷன் தொடர்பாக வெளியான வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பஞ்சதந்திரம் வெர்ஷன்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த திரைப்படம் "பஞ்சதந்திரம்". கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன் மற்றும் யூகி சேது ஆகியோர் நண்பர்களாக நடித்திருந்த இந்த படத்தில், முழுக்க முழுக்க ஐந்து பேரின் காமெடி காட்சிகள் நிறைந்திருக்கும். மேலும், குடும்பத்திற்கு தெரியாமல், ஐந்து நண்பர்கள் இணைந்து மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தன.

அந்த வகையில், கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன் மற்றும் யூகி சேது ஆகியோர் கான்ஃபரன்ஸ் காலில் பேசும் காட்சி ஒன்றும் பஞ்ச தந்திரம் படத்தில் வரும். அதை போலவே, கமல்ஹாசனைத் தவிர, மற்ற நான்கு பேரும் இணைந்து, விக்ரம் படம் குறித்து போனில் பேசும் காட்சியை வைத்து புரொமோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



பஞ்ச தந்திரம் படத்தை நினைவு கூரும் வகையில், இந்த புரொமோ அமைந்திருப்பதால், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Vikram movie new promo with Panchathanthiram team

People looking for online information on Anirudh Ravichander, Fahadh Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj, PanchaThanthiram Movie, Vijay Sethupathi, Vikram, Vikram Promo will find this news story useful.