“நம் இயக்குனரோட…” மிரட்டலான ’விக்ரம்’ மேக்கிங்… ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட BTS வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | KGF 2 ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது? அமேசான் ப்ரைம் வெளியிட்ட ‘மாஸ்’ Update

விக்ரம்…

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

படம் மீதான எதிர்பார்ப்பு…

அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜின் படம் என்பதாலும், கமல் நான்காண்டுகளுக்குப் பிறகு நடிப்பதாலும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது.  கூடுதலாக ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் அனிருத் போன்ற கலைஞர்களும் இருப்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது. அதுபோலவே இதுவரை படம் சம்மந்தமாக வெளியான ப்ரமோஷன்கள் அனைத்தும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

அடுத்தடுத்த ப்ரமோஷன்கள்…

படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது படத்தில் புதிய மேக்கிங் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்.  இந்த மிரட்டலான மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. முன்னதாக படத்தில் பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போஸ்டர்கள் வெளியாகி கவனத்தைப் பெற்றன.

 

Also Read | #BeSafeTamilCinema “அவர்கள் அபாயத்தில் இருக்கின்றனர்”… தயாரிப்பாளர் SR பிரபுவின் வைரல் Tweet!

 

தொடர்புடைய இணைப்புகள்

Vikram movie new making glimpse released

People looking for online information on Kamal Haasan, Vikram Movie, Vikram movie making will find this news story useful.