கமல் நடிக்கும் "விக்ரம்" பட பெயரில் விற்பனைக்கு வந்த PERFUME! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர்.

Advertising
>
Advertising

சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதருக்காக புது நிறுவனம் ஒன்றைத் துவக்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தி இருந்தார். KH - House of Khaddar என தன் நிறுவனத்தின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார். தேர்தல் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் சென்றபோது இந்த எண்ணம் தோன்றியதாகவும் கமல் கூறினார்.

இந்நிறுவனத்தின் சார்பில்  ‘KH Memoir’ எனும் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வெளியீட்டை ஒட்டி, House of Khaddar நிறுவனம் விக்ரம் படத்தின் பெயரில்  ‘KH Memoir’ வாசனை திரவத்தின் லிமிட்டெட் எடிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie KH Memoir perfum bottle images goes Viral

People looking for online information on கமல், Kamal Haasan, Vikram, Vikram Movie KH Memoir perfum will find this news story useful.