வேற லெவல் UPDATE … பகத் ஃபாசில் கதபாத்திரம்... சீக்ரெட் உடைத்த ‘விக்ரம்’ படக்குழு – வைரல் POSTER

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் திரைப்படத்தில் பகத் ஃபாசிலின் கதாபாத்திரம் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அந்த 60 நிமிஷம் இருக்கே.." சூப்பர்ஸ்டாருடன் SK எடுத்துக் கொண்ட ஃபோட்டோ.. அவர் போட்ட Caption தான் 'செம'

விக்ரம்…

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

கதாபாத்திர ரகசியம்…

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதற்கு, கமலுடன் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி போன்ற பிரபல நடிகர்களும் படத்தில் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. மேலும் சூர்யாவும் கௌரவ வேடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் படத்தில் இதுவரை யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பகிராமல படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர். படத்தலைப்பான ‘விக்ரம்’ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறாரா அல்லது டிரைலரில் இடம்பெறும் குழந்தையின் பெயரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அமர்- ஆக பகத் ஃபாசில்….

இதையடுத்து இப்போது முதல் முறையாக படத்தில் பகத் ஃபாசில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர். தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் படத்தில் அவர் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.  மேலும் டிரைலரில் அவர் பேசும் வசனமான “ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் மீறப்படும்” என்பதையும் இணைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர்.

Also Read | “அப்போ shock-ஆ இருந்துச்சு… இப்போ ஹேப்பி”… ‘தி லெஜண்ட்’ ஆடியோ விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram movie fahadh fassil character name revealed

People looking for online information on கமல்ஹாசன், பகத் ஃபாசில், விக்ரம், Fahadh fassil, Kamal Haasan, Vikram Movie, Vikram movie fahadh fassil will find this news story useful.