கமல்ஹாசனின் விக்ரம் திரைப்பட ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்க உள்ளது.
Also Read | ”அந்த விழாவில் கலந்துக்க ஆசையா இருந்தேன்”…2வது முறை கொரோனா .. அக்ஷய் குமாரின் Tweet!
விக்ரம்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ‘விக்ரம்’ உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
பத்தல பத்தல ஹிட்…
இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல்- அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல பாடல் மே 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியானது. இந்த பாடலைக் கமலே எழுதிப் பாடியுள்ளார். இது கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாடல் வெளியான பின்னர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நிகழ்ச்சியில் DD…
இதையடுத்து இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் வந்து கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை நடக்க உள்ள நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அவர் கமல்ஹாசனோடு இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.
திவ்யதர்ஷினி ‘காபி வித் டிடி’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், பல சினிமா சம்மந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமானவர். நிகழ்ச்சிகளை கலகலப்பாக, சலிப்பில்லாமல் கொண்டு செல்வார் எனபதால் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8