அடடே.. நம்ம 'விக்ரம்' படத்துல மாஸ் காட்டுன "ஏஜென்ட் டீனா" இவங்க தானா? இது தெரியாம போச்சே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் ஏஜன்ட் டீனா கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vikram Movie Agent Tina Dancer Vasanthi Exclusive Interview
Advertising
>
Advertising

‘விக்ரம்’ திரைப்படம் இன்று (06.03.2022) உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Vikram Movie Agent Tina Dancer Vasanthi Exclusive Interview

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

இப்படத்தில் கமல் கர்ணன் & விக்ரம் என்ற இரு பெயரிலும் நடித்துள்ளார். விஜய் சேதுபதி 'டாக்டர் சந்தனம்' எனும் பெயரிலும் , பஹத் பாசில் 'அமர்' எனும் பெயரிலும் நடித்துள்ளனர். இதனை படக்குழு முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படத்தில், ஏஜன்ட் டீனா எனும் கதாபாத்திரத்தில் டான்சர் வசந்தி நடித்துள்ளார். கமல் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண், ஒரு இக்கட்டான சூழலில் டீனாவாக மாறி வில்லன்களுடன் சண்டை செய்யும் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

கில் பில் படத்தில் வரும் உமா துர்மன் உடன் வசந்தியை ஒப்பிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை வசந்தி, நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனது 30 வருட நடன கலைஞராக சினிமா அனுபவங்கள், நடிகர்கள் அஜித், விஜய் பற்றியும், அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் பேசினார். மேலும் விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது பற்றியும், லோகேஷ் கனகராஜ் , பஹத் & கமல் ஹாசன் உடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்தார். 

விக்ரம் படம் பார்த்த பின் தினேஷ் மாஸ்டர், உறவினர்கள், நண்பர்கள் அளித்த கருத்துக்கள் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.  நடிகை வசந்தி தினேஷ் மாஸ்டரிடமும் பிருந்தா மாஸ்டரிடமும் உதவி நடன இயக்குனராக பணியாற்றியவர். சமீபத்தில் 'வலிமை' படத்தில் இடம்பெற்ற 'நாங்க வேற மாரி' பாடலுக்கு பணியாற்றியுள்ளார். 

அடடே.. நம்ம 'விக்ரம்' படத்துல மாஸ் காட்டுன "ஏஜென்ட் டீனா" இவங்க தானா? இது தெரியாம போச்சே வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie Agent Tina Dancer Vasanthi Exclusive Interview

People looking for online information on Agent Tina, Agent Vikram, Dancer Vasanthi, Vikram will find this news story useful.