அந்த DRUMS -அ கொடுங்க.. VIBE ஆன விக்ரம் மற்றும் கார்த்தி.. கண்ணை மூடிக்கிட்டு DRUMS அடிச்ச த்ரிஷா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த மாத இறுதியில் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, விக்ரம் மற்றும் த்ரிஷா ஆகியோர் ஆர்வத்துடன் ட்ரம்ஸ் வாசித்திருக்கின்றனர்.

Vikram Karthi and Trisha play drums in PS1 function
Advertising
>
Advertising

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1" செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikram Karthi and Trisha play drums in PS1 function

முன்னதாக, வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்ள, கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழுவினர் இயங்கி வருகின்றனர். சமீபத்தில், இயக்குனர் மணிரத்னம், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், நடிகர் கார்த்தி, விக்ரம் மற்றும் த்ரிஷா ஆகியோர் அங்கு நடைபெற்ற ட்ரம்ஸ் இசை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அப்போது கலைஞர்கள் கீழே இறங்கிவர, நடிகர் விக்ரம் ஆர்வத்துடன் ட்ரம்ஸ்-ஐ கலைஞரிடம் இருந்து பெற்று இசைக்கத் துவங்கினார். இதனையடுத்து நடிகர் கார்த்தியும் ட்ரம்ஸ் இசைத்தார். இதனை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்த த்ரிஷா, இசைக்கலைஞர் ஒருவரிடம் இருந்த ட்ரம்ஸை கண்ணை மூடிக்கொண்டு இசைத்தார். இதனைக்கண்ட ரசிகர்கள் ஆராவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Karthi and Trisha play drums in PS1 function

People looking for online information on Jayam Ravi, Karthi, Ponniyin Selvan part 1, Trisha Krishnan, Vikram will find this news story useful.