விக்ரம் நடிப்பில் ஆகஸ்டு 31-ல் ரிலீஸ் ஆகவுள்ள கோப்ரா படத்தின் செம அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் 'கோப்ரா'.

Advertising
>
Advertising

Also Read | Pathonpathaam Noottandu: "என் மன வானில், காசி" இயக்குநரின் பத்தொன்பதாம் நூட்டாண்டு மலையாள பட டிரெய்லர்.!

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். முன்னதாக இந்த படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து தராங்கினி எனும் ஒரு பாடலும், ஏலே இளஞ்சிங்கமே எனும் பாடலும் அடுத்தடுத்து வெளியாகின.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. இப்படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் 25.08.2022 அன்று வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read | போடு.. திருவிதாங்கூர் மகாராணியாக பூனம் பஜ்வா.. ‘பத்தொன்பதாம் நூட்டாண்டு’ டிரெய்லர்.

Tags : Cobra, Vikram

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Cobra movie trailer update விக்ரம் நடிக்கும் கோப்ரா

People looking for online information on Cobra, Vikram will find this news story useful.