விக்ரம் நடிக்கும் "கோப்ரா" படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல டிவி சேனல் நிறுவனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சியான் விக்ரம். கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | கட்டிப்பிடிச்சு சிரிக்க வச்ச நயன்தாரா… அவங்க நடிப்ப பத்தி சமந்தா சொன்ன கமெண்ட் – வைரல் story

இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் ஏப்ரல் 22 அன்று இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது.

விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து சொல்லி இருந்தது. அதில், கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பிரபுதேவாவுடன் மீண்டும் Sing in the rain…தெறிக்க விட்ட வடிவேலுவின் பாட்டு… வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Cobra movie satellite TV Rights Bagged by Kalaigner TV

People looking for online information on Ajay Gnanamuthu R, Cobra movie, Vikram, Vikram Cobra movie updates will find this news story useful.