பிரபல OTT-யில் ரிலீஸாகும் விக்ரம் நடித்த 'கோப்ரா'.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோப்ரா படம் பிரபல OTT-யில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அயோத்தியில் பாகுபலி பிரபாஸ் நடிக்கும் PAN INDIA படத்தின் விழா.. படக்குழு வெளியிட்ட சூப்பர் தகவல்!

விக்ரம் நடிப்பில்  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க, இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 488 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியது.‌ கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல சோனி லிவ் தளம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படம் இன்று (27.09.2022) முதல் சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் டென்ட் கொட்டா தளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.

Also Read | நவராத்திரி SPECIAL.. பிரபல ஃபோட்டோ கிராபருடன் TRADITIONAL லுக்கில் PHOTOSHOOT.. அசத்திய அதிதி ஷங்கர்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Cobra Movie OTT Release on Sony LIV

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Cobra Movie OTT Release, Sony LIV, Vikram will find this news story useful.