விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. கேரளா ரிலீஸ் உரிமத்தை இவங்க தான் வாங்கிருக்காங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் கேரளா உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் அஜித்குமாருடன் 10 மணி நேர விமானப்பயணம்.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த வைரல் பதிவு!

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் கேரளா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான இபார் மீடியா - ராபி மாதிரா மற்றும் ட்ரீம் பிக் பிலிம்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளனர். இந்த ட்ரீம் பிக் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கேரளாவில் வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டர் இதான்.. வெளியான கொல மாஸ் லுக்!

Vikram Cobra movie Kerala theatrical rights bagged by dream big films

People looking for online information on Cobra movie, Dream big films, Vikram cobra movie will find this news story useful.