அடடே.. 'கோப்ரா' படத்தின் ஒரு வார வசூல் இம்புட்டா? ஐரோப்பிய வினியோகஸ்தர் சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோப்ரா படத்தின் ஒரு வார ஐரோப்பிய வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 3:33 லக்கி நம்பரா? ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து!

விக்ரம் நடிப்பில்  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் முதல் நாள் முதல் காட்சி காலை 5 மணிக்கு  திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க, இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 488 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.

இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியது.‌ கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோப்ரா படத்தின் UK & ஐரோப்பிய தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது அந்நிறுவனம் கோப்ரா படத்தின் ஒரு வார ஐரோப்பிய வசூல் நிலவரத்தை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. € 71,445 ஐரோப்பிய டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு பின் விக்ரமின் மிகச் சிறந்த வசூலாக இதை அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

Also Read | விக்ரம் நடிப்பில் 'கோப்ரா-2' வருமா? பதில் அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Cobra Movie Europe Box Office Collection Official

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Cobra Movie Box Office Collections, Vikram will find this news story useful.