விக்ரம் நடிக்கும் ’கோப்ரா’… ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமை… கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஆண்டவர் onfire… workout வீடியோ Glimpse-ஐ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!

கோப்ரா

விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படத்தின் ரிலீஸூக்கு பிறகு தற்போது கோப்ரா திரைப்படம் உருவாகி ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

ரிலீஸ்

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தகக்து.

வெளிநாட்டு உரிமை

இந்நிலையில் ‘கோப்ரா’ படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ‘யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Also Read | விலங்கு-க்குப் பின் விமலின் அடுத்த படம்… Title-உடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்.!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram cobra movie entire overseas rights bagged

People looking for online information on Cobra movie, Vikram, Vikram cobra movie will find this news story useful.