கோப்ரா படத்தின் சென்னை, செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
Also Read | COBRA FDFS : பிரபல தியேட்டரில் ரசிகர்களுடன் ஆரவாரமாக கோப்ரா படம் பார்த்த விக்ரம் & துருவ்.. வைரல் VIDEO!
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரைப்படங்களில் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் முதல் நாள் முதல் காட்சி காலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சென்னை நகரில் 21 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு ஏரியாவில் 87 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 வினாடிகள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67.. படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்! இவர் தானா?