COBRA படத்தோட ரன்னிங் டைம் எவ்வளவு? படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின்  ரன்னிங் டைம் மற்றும் சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ் விவரம் வெளியாகி உள்ளது.

Vikram Cobra Movie Censored UA Running Time Details
Advertising
>
Advertising

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

Vikram Cobra Movie Censored UA Running Time Details

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25 ஆம் தேதி) வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.‌ மேலும் இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 வினாடிகள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cobra, Vikram, CBFC

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Cobra Movie Censored UA Running Time Details

People looking for online information on CBFC, Cobra, Vikram will find this news story useful.