கோப்ரா படத்தின் இதுவரை காணாத BTS.. 'ஜென்னி' மிருணாளினி ரவி பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோப்ரா படத்தின் இதுவரை காணாத BTS புகைப்படங்களை நடிகை மிருணாளினி ரவி வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "மாமன் மச்சான் எல்லாம் இனி.." அனிருத் குரலில் PRINCE படத்தின் முதல் சிங்கிள் பாட்டு!

விக்ரம் நடிப்பில்  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் முதல் நாள் முதல் காட்சி காலை 5 மணிக்கு  திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க, இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 488 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.

இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியது.‌

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜென்னி எனும் கதாபாத்திரத்தில் நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் மிருணாளினி ரவி பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.

நடிகை மிருணாளினி, ஏற்கனவே தமிழில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் டிக் டாக், டப்மாஷ் போன்ற இணைய பயன்பாட்டு மென்பொருள்களில் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Also Read | இரண்டு பாகங்களாக வெளியாகிறதா 'விடுதலை'? படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Cobra Movie BTS Images from Mirnalini Ravi

People looking for online information on Mirnalini Ravi, Vikram, Vikram Cobra Movie BTS Images will find this news story useful.