”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார்.
Also Read | செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம்.. பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?
இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.
கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இன்று (ஏப்ரல் 22 ) ஆதீரா எனும் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. "ஆதீரா ஆதீரா உன் ரூபம் பல நூறா..ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் கோப்ரா" என பாடல் வரிகள் அமைந்துள்ளன.
A. R ரஹ்மான் இசையில், பா.விஜய் வரிகளில் இந்த பாடல் உருவாகி உள்ளது. வகு மஜான் இந்த பாடலை பாடியுள்ளார். ராப் இசையை Thoughts For Now குழுவினர் எழுதி பாடியுள்ளனர்.
விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8