விண்டேஜ் கமல் தான்.. இவ்வளவு YOUNG-அ இருக்காரே..! வெளியான விக்ரம் படத்தின் செம்ம BTS போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

கமல்ஹாசன் தயாரித்துள்ள விக்ரம் படத்தின் ஒட்டு மொத்த தமிழக வினியோகஸ்த உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக BIGGEST ACTION ENTERTAINER என்ற அடைமொழியுடன் ஜூன்-3 அன்று வெளியாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் DOP கிரிஷ் கங்காதரன் குழுவினர் இன்ஸ்டாகிராமில் விக்ரம் படப்பிடிப்பில் எடுத்த BTS புகைப்படங்களை  பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படத்தின் ஓரத்தில் கமல்ஹாசனின் இளவயது புகைப்படம் உள்ளது. 1986 ல் வெளியான விக்ரம் படத்தில் உள்ள கமல் தோற்றத்தை ஒத்து இந்த போட்டோ அமைந்துள்ளது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனை இளமையான தோற்றத்தில் காட்ட De-aging தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த செட் மாநகர போலீஸ் கமிசனர் அலுவலகம் போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. 

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

விண்டேஜ் கமல் தான்.. இவ்வளவு YOUNG-அ இருக்காரே..! வெளியான விக்ரம் படத்தின் செம்ம BTS போட்டோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

VIKRAM BTS PIC.. Vintage Kamal Haasan as old VIKRAM look

People looking for online information on Anirudh, Fahad Faasil, Kamal, Kamal Haasan, Lokesh Kanagaraj, Raaj Kamal, Vijay Sethupathi, Vikram, Vinatage Kamal will find this news story useful.