ராமாயணத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார். இவருக்கு வயது 82.
1987 ஆம் ஆண்டு உருவான தொடர் ராமாயணம். ராமானந்த் சாகர் இயக்கத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த தொடரை காண இந்தியாவில் அதிக பார்வையாளர்களால் பெரும் ஆர்வம் காட்டினர்.
ராமனாக, அருண் கோவில் நடித்திருந்த இந்த தொடரில் சீதையாக தீபிகா சிக்கலியா, லட்சுமணன் வேடத்தில் சுனில் லஹிரி, அனுமனாக தாராசிங் நடித்திருந்தனர். இத்தொடரில் ராவணன் வேடத்தில் நடித்தவர் தான் அரவிந்த் திரிவேதி.
ராவணனை தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்த அரவிந்த் திரிவேதி இந்த சீரியலை அடுத்து இந்தி, குஜராத்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதேபோல் இந்தியில் ஒளிபரப்பான ‘விக்ரம் அவுர் பேத்தால்’ என்கிற விக்ரமாதித்ய மன்னனை மையமாகக் கொண்ட தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் திரிவேதி நடித்தார்.
பின்னர் பாஜகவில் அவர் இணைந்து, குஜராத் சபர்கந்தா மக்களவைத் தொகுதியில் 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மும்பை காந்திவெலியில் வசித்துவந்த இவர் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். நடிகர்கள் அருண் கோவில் மற்றும் சுனில் லஹ்ரி ஆகியோர் அரவிந்த் திரிவேதியை நினைவு கூர்ந்துள்ளனர்.
இதேபோல் இவரது மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துமுள்ளார். இது தொடர்பாக பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “அரவிந்த் திரிவேதி சிறந்த நடிகர் மட்டுமல்ல, பொதுச்சேவையில் ஆர்வம் கொண்டவர். ராமாயண் தொடரில் நடித்ததற்காக அவர் பல தலைமுறை இந்தியர்களாலும் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவார். அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read: "பிக்பாஸ் வீட்டில் வெடித்தது பிரச்சனை!!".. ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. கதறும் ரசிகர்கள்!