BREAKING: சீயான் 60-ல் விக்ரமுடன் நடிக்கிறார் துருவ், கோலிவுட்டைக் கலக்கப் போகும் புது கூட்டணி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துருவ் அறிமுகமாகிய ஆதித்யா வர்மா படத்தில் விக்ரம் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்திருந்தார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 

Advertising
Advertising

தற்போது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் சீயான் 60 படத்திற்காக விக்ரம், துருவ் இணைந்து நடிக்க உள்ளனர்.

விக்ரம் தனது அடுத்த படத்திற்காக கார்த்திக் சுப்பராஜுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்னால் வெளியானது. இச்செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.  மேலும், இந்தப் படத்தில் இன்னொரு பெரிய நடிகர் விக்ரமுடன் இணையவிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. அந்த மற்றொரு நடிகர் அவரது மகன்தான் என்ற இப்போது வெளியான செய்தி, இருவரின் ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளது..

இந்த தந்தை-மகன் காம்போ கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும், இருவரின் மேஜிக் எப்படியிருக்கும் என்பதை திரையில் காண, படம் வெளியாகும்வரை காத்திருக்க வேண்டும். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் .

தற்போது, விக்ரம் கோப்ரா, பொன்னியன் செல்வன் ஆகிய படங்களில்  நடித்து வருகிறார்,  இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்  தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியை விரைவில் தொடங்க உள்ளார். , மேலும், தனது பென்குயின் திரைப்படத்தின் நேரடி OTT வெளியீட்டை எதிர்நோக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram and Dhuruv join in Karthik Subburaj next Vikram 60

People looking for online information on Chiyan, Dhruv Vikram, Karthik Subbaraj, Vikram, Vikram 60 will find this news story useful.