கோப்ரா படத்திற்கு பிறகு.. மீண்டும் இணையும் விக்ரம் - அஜய் கூட்டணி??.. வெளியான அசத்தல் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக 'கோப்ரா' திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகார அறிவிப்பு வெளியாகி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | சிம்பு - கிருஷ்ணா கூட்டணியில் உருவாகும் பத்து தல.. ஷூட்டிங் குறித்து கிடைத்த சூப்பர் தகவல்

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, கோப்ரா படத்தையும் இயக்கி உள்ளார். லலித் குமார் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரமுடன் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்தியூஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்று இருந்தது.

ஏற்கனவே தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், மற்ற இரண்டு பாடல்களான தாரங்கிணி மற்றும் ஏலே இளம் சிங்கமே உள்ளிட்ட பாடல்கள், வெளியிடப்படிருந்தது. முன்னதாக, இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு பெற்றிருந்தது.

சியான் விக்ரம் - அஜய் ஞானமுத்து கூட்டணியில் சற்று வித்தியாசமாக உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தையும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், விக்ரம் மீண்டும் அஜய் ஞானமுத்துவுடன் இணைவது தொடர்பாக, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்தியேக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் பின்னர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் இரண்டாவது முறையாக அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிக்க உள்ள திரைப்படத்தில் இணைய உள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது.

Also Read | மேடை அருகே கண்ணீர் விட்ட ரசிகர்.. உடனடியா துல்கர் செய்த விஷயம்.. வைரல் சம்பவம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram and ajay gnanamuthu to join again sources

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra movie, Vikram, Vikram cobra movie will find this news story useful.