சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் 46வது திரைப்படத்துக்கான படப்பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் தற்போது எடிட்டிங் பணிகளில் உள்ளது. அப்படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அண்மையில் தான் காலமானார். இதுகுறித்து விஜய் சேதுபதியும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். முன்னதாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. தவிர சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக அண்மையில் விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெறுவதாக அறிவிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் தளபதி விஜயை வைத்து தளபதி65 படத்தையும், விஜய் சேதிபதியை வைத்து விஜய் சேதிபதி46 படத்தையும் தயாரித்து வருகிறார். இதில் தளபதி65 படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதேபோல் விஜய் சேதுபதி46 படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். விஜய் சேதுபதியுடன் பிரபலமான நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தி விஜய் டிவி புகழும் நடிக்கிறார். அண்மையில் இந்த படம் நடக்கும் பகுதியில் விஜய் சேதுபதியுடன் பைக்கில் போய்க்கொண்டிருந்த புகழின் புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் இயக்குநர் பொன்ராமுடன் சேர்ந்து விஜய் டிவி புகழ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளியில் கலக்கிக் கொண்டு வரும் புகழ் அண்மையில் தான் கார் வாங்கியிருந்ததை தமது ரசிகர்களிடன் சொல்லி மகிழ்ந்தார். இதனை அடுத்து குக் வித் கோமாளியில் பவித்ராவை ஃபைனலிஸ்ட் ஆக்கியதற்காக பாராட்டையும் பெற்றார்.
தற்போது விஜய் சேதுபதியின் படத்தில் நடித்துவரும் புகழின் கேரக்டர் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
ALSO READ: "என் பேருந்து ஓட்டுநருக்கும்.. வறுமையில் வாடும்போதும் என்னை நடிகனாக்க" - ரஜினி உருக்கம்.