ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஜய் சேதுபதி, தமன்னா தோன்றும் புதிய மாஸ்டர் செஃப் PROMO வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல திரைப்படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே சன் டிவி க்காக புகழ்ப்பெற்ற மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்க உள்ளார். இதே போல நடிகை தமன்னா இதே நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழச்சியை பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இதில் சுந்தரத்தெலுங்கில் விஜய் சேதுபதி பேசுவது ரசிகர்களை பரவலாக கவர்ந்துள்ளது. தமன்னா - விஜய் சேதுபதியின் வசன உச்சரிப்பு நானும் ரவுடி தான் படத்தினை ஞாபகப்படுத்துவது போல் அமைந்துள்ளது தான் இந்த ப்ரோமோ வீடியோவின் சிறப்பாகும்.

இந்த தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஜெமினி டிவியிலும், தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி சன் டிவியிலும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியினை இன்னவேட்டிவ் பிலிம் அகாடமி உடன் சேர்ந்து எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது.

ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஜய் சேதுபதி, தமன்னா தோன்றும் புதிய மாஸ்டர் செஃப் PROMO வீடியோ!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijaysethupathi tamanna satrring new master chef promo video

People looking for online information on Tamannaah, Tamannaah Bhatia, Vijay Sethupathi will find this news story useful.